Join our Mailing List
2021 Thai Pongal Details
back to events
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் தைப் பொங்கல் கோலப்போட்டி :
1. போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபெறலாம்.
2. உங்கள் வீட்டிலிருந்தபடியே கோலப்போட்டியில் பங்கு பெறலாம்.
3. உங்கள் வீட்டு தரை அல்லது அட்டையில் வண்ணமயமான கோலமிட்டு அதைப் புகைப்படம் எடுத்து எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு info@njtamilsangam.org அனுப்பவும்.
போட்டியில் பங்குபெற இங்கே பதிவு செய்யவும் :
https://forms.gle/R5CVZFwXJ1GxU9TG7
விதிமுறைகள் :
1. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.
2.கோலம் தைப்பொங்கல் விழாவைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
3. கோலம் எந்த அளவிலும் இருக்கலாம்.
4. கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். வண்ணப்பொடியும் உபயோகிக்கலாம்.
5. முழுக்கோலமும் தெரியுமாறு இரண்டு படங்களுக்குமேல் அனுப்பவேண்டாம்.
6. கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும் (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை).
7. உறுப்பினர் ஒரு கோலம் மட்டும் தான் அனுப்பிடவேண்டும்.
8. படங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
9. கோலம் அனுப்ப கடைசி தேதி : ஜனவரி 15, 2021.
10. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
சிறந்த கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (ஜனவரி,17) அன்று அறிவிக்கப்படும்.
கோலமிடுங்கள்…..!! பரிசு வெல்லுங்கள்……!!!