2021 Thai Pongal Registrations

தமிழ் இசை நிகழ்ச்சி பதிவு (Closed)

கல்யாணமாலை பட்டிமன்றம் நிகழ்ச்சி பதிவு (Closed)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf1ovafG97wWkya-zzUn0XrvsSVWQVeZj5b1BrzompTl8RJ5g/viewform

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கும் தைப் பொங்கல் கோலப்போட்டி (Closed)

1. போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபெறலாம்.
2. உங்கள் வீட்டிலிருந்தபடியே கோலப்போட்டியில் பங்கு பெறலாம்.
3. உங்கள் வீட்டு தரை அல்லது அட்டையில் வண்ணமயமான கோலமிட்டு அதைப் புகைப்படம் எடுத்து எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு info@njtamilsangam.org அனுப்பவும்.
போட்டியில் பங்குபெற இங்கே பதிவு செய்யவும் :
https://forms.gle/R5CVZFwXJ1GxU9TG7


விதிமுறைகள்

தமிழ் இசை விதிமுறைகள்:

1. குறைந்தது இருவர் அடங்கிய குழுவாக இருத்தல் அவசியம்.

2. இசைப்பள்ளி ஆசிரியர்களே விண்ணப்பிக்கலாம். ஒருவர் ஒரு குழுவிற்காக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

3. நீங்கள் 2021 ஆம் ஆண்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க உறுப்பினராக இருத்தல் அவசியம். ஆண்டு உறுப்பினராக இணைய – https://njtamilsangam.net/web/box-office

4. ஏற்றுக்கொள்ளப்படும் தமிழ்ப் பாடல்கள் – கிராமியப் பாடல், தேவாரம், திருப்புகழ், பாசுரம், கர்நாடக இசை தமிழ்ப் பாடல், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், பக்திப்பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள்

5. பாடகர்கள் பாட்டு, பண், ராகம் மற்றும் தாளம் பற்றிய விவரங்களை காணொளியில் பதிவு செய்ய வேண்டும்.

6. பாடல் 5 நிமிடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

7. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 3, 2021. தாமதமாக வரும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப் படாது.

8. தேர்ந்தெடுக்கப்படும் பாடகர்களே நிகழ்ச்சியில் பங்குபெறுவர்.

9. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தீர்ப்பே இறுதியானது.

10. இசைப்பள்ளி ஆசிரியர்கள், காணொளி பதிவின்போது சமூக இடைவெளி மற்றும் கொரோனா சம்பந்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்புப் படிவம் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

பட்டிமன்றம் விதிமுறைகள்:
1. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும்.
2. நீங்கள் 2021 ஆம் ஆண்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க உறுப்பினராக இருத்தல் அவசியம். ஆண்டு உறுப்பினராக இணைய – https://njtamilsangam.net/web/box-office
3. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 1, 2021. தாமதமாக வரும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப் படாது.
4. தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்களே நிகழ்ச்சியில் பங்குபெறுவர். தகுதிச் சுற்று பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கோலப்போட்டி விதிமுறைகள்:
1. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.
2.கோலம் தைப்பொங்கல் விழாவைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
3. கோலம் எந்த அளவிலும் இருக்கலாம்.
4. கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். வண்ணப்பொடியும் உபயோகிக்கலாம்.
5. முழுக்கோலமும் தெரியுமாறு இரண்டு படங்களுக்குமேல் அனுப்பவேண்டாம்.
6. கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும் (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை).
7. உறுப்பினர் ஒரு கோலம் மட்டும் தான் அனுப்பிடவேண்டும்.
8. படங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
9. கோலம் அனுப்ப கடைசி தேதி : ஜனவரி 15, 2021.
10. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
சிறந்த கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா (ஜனவரி,17) அன்று அறிவிக்கப்படும்.
கோலமிடுங்கள்…..!! பரிசு வெல்லுங்கள்……!!!

Shopping Cart
Scroll to Top