follow Us

Committee Member Login

Read Silver Jubilee Malar

Join our Mailing List

Sign Up

galleries

Pongal Vizha 2018 – Rules

பொங்கல் சிறப்பு கலை நிகழ்ச்சி விதிமுறைகள்:

  1. நியூ ஜெர்சி தமிழ் சங்க ஆண்டு உறுப்பினராக (basic or annual membership) இருப்பது அவசியம்.
  2. குழு நடனமாக இருத்தல் அவசியம். குழுவில் குறைந்தது 6 பேர் இருக்க வேண்டும்.
  3. பங்கேற்பாளர்கள் 14 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
  4. ஒவ்வொரு குழுவிற்கும் 5 நிமிடங்கள் அதிகபட்சம் வழங்கப்படும்.
  5. கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்கள் அல்லது இசைக்கு மட்டுமே நடனமாட வேண்டும் – திரைப்பட பாடலாகவும் இருக்கலாம்.
  6. பங்கேற்க பாடல் மற்றும் குழு விவரங்களுடன் ஜனவரி 10க்குள் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
  7. ஜனவரி 10 க்கு முன்னரே குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவுகள் வந்துவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படும்.


விண்ணப்ப படிவம்: கலை நிகழ்ச்சி விண்ணப்பம்


பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி விதிமுறைகள்:

  1. போட்டியாளர்கள் 14 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
  2. போட்டியாளர்கள் நியூ ஜெர்சி தமிழ் சங்க ஆண்டு உறுப்பினராக (basic or annual membership) இருப்பது அவசியமில்லை.
  3. போட்டியாளர்கள் நியூ ஜெர்சியில் வசிப்பவராக இருப்பது அவசியம்.
  4. கவிதையின் கரு பொங்கல் அல்லது தமிழர் திருநாள் பற்றியதாக இருக்க வேண்டும்.
  5. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க இயலும்.
  6. தேர்ந்தெடுக்கப்படும் கவிதை நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இணையதளம் மற்றும் முகநூலில் வெளியிடப்படும்.
  7. கவிதைகள் ஜனவரி 20, 2017 இரவு 9 ( 9PM – EST ) மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
  8. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


விண்ணப்ப படிவம்: கவிதைப் போட்டி விண்ணப்பம்


தமிழ் மரபு சார்ந்த கைவினைப் பொருட்கள் போட்டி விதிமுறைகள்:

  1. நியூ ஜெர்சி தமிழ் சங்க ஆண்டு உறுப்பினராக (basic or annual membership) இருப்பது அவசியம்.
  2. போட்டியாளர்கள் 14 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
  3. போட்டியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உங்கள் பொறுப்பில் இருத்தல் வேண்டும். தமிழ் சங்கம் இதில் பொறுப்பெடுத்துக்கொள்ளாது!
  4. போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். என்ன மாதிரியான கைவினை பொருட்கள், தேவையான இட சதுரடி போன்றவை குறிப்பிட்டு சொல்லவும்.
  5. கைவினை பொருட்களை தாங்களே செய்ததாக இருக்க வேண்டும்.
  6. விண்ணப்பம் ஜனவரி 20, 2017 இரவு 9 ( 9PM – EST ) மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
  7. போட்டி நாளன்று முன்னதாகவே வந்து கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் கைவினை பொருட்களை வைத்துவிடவேண்டும்.
  8. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


விண்ணப்ப படிவம்: கைவினைப் பொருட்கள் போட்டி விண்ணப்பம்


Our Sponsors

New York Life

Agni Estates

SD Capital Funding

Mass Mutual