Pongal Vizhaa 2020 Cultural & Competition Rules

குழு நடனம் விதிமுறைகள் – Group Dance Rules

1. குழு நடனமாக இருத்தல் அவசியம். குழுவில் குறைந்தது 6 பேர் இருக்க வேண்டும்.
2. முன்னுரிமை ஆண்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
3. பங்கேற்பாளர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
4. ஒவ்வொரு குழுவிற்கும் 5 நிமிடங்கள் அதிகபட்சம் வழங்கப்படும்.
5. கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்கள் அல்லது இசைக்கு மட்டுமே நடனமாட வேண்டும் – திரைப்பட பாடலாகவும் இருக்கலாம்.
6. பங்கேற்க பாடல் மற்றும் குழு விவரங்களுடன் ஜனவரி 16க்குள் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
7. ஜனவரி 16 க்கு முன்னரே குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவுகள் வந்துவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படும்.

1. Group dance is only allowed, a group of minimum of 6 people.
2. Annual Members get first preference and as part of the membership they get free entry to our events.
3. Participants should be above 8 years of age.
4. Each team will be given 5 minutes maximum.
5. Theme of the dance should be based on rural or folk songs, can be a movie song as well.
6. Registration, songs and team details should be submitted by January 16th.
7. Registrations will close early if we reach the required numbers.

கோலப்போட்டி (ரங்கோலி) விதிமுறைகள்/ Kolam Competition rules:

1. பதிவு குழு அடிப்படையாக இருக்கலாம் (3 நபர்களுக்கு மிகாமல்) அல்லது தனிநபராக இருக்கலாம்.
2. NJTS சுவரொட்டி பலகையை வழங்குவார்கள் ( 3′ by 3′ or 3′ by 4′).
3. உங்கள் கோலத்தை அலங்கரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் கோலம் பொடி, மணல், தானியங்கள் போன்ற உங்கள் சொந்தப்பொருட்களை கொண்டுவரவும்
4. பொங்கல் சார்ந்த கோலங்களாக இருக்கவேண்டும்.
5. கோலம் தயாரிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கபடும்.
6. படைப்பாற்றல், தனித்துவம் மற்றும் வழங்கப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படும்.

1. Registration can be group based (not exceeding 3 people) or individual.
2 . Poster board will be provided by NJTS (3′ by 3′ or 3′ by 4′).
3. Please bring your own supplies, can be rangoli powder, grains, sand etc.
4. Theme has to be Pongal based.
5. Allocated time to complete the kolam is an hour from the start of the time given.
6. The kolam will be judged based on the creativity, uniqueness, pongal theme and the way it is presented.

பொங்கல் சமையல் போட்டி விதிமுறைகள்/Sakarai Pongal cooking competition rules:

  1. சர்க்கரைப் பொங்கல் சமைத்திட வேண்டும். 2 பேருக்கான அளவுடன் மட்டுமே இருக்கவேண்டும்.
  2. உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பொங்கல் இருந்திடட்டும். அரிசி, தானிய வகைகள் இருக்கலாம்.
  3. நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது.
  4. வீட்டிலிருந்து சமைத்து கொண்டுவரவேண்டும்.
  5. சுவை, காட்சிப்படுத்தும் விதம், பயன்படுத்திய பொருட்களுக்கு ஏற்ப நடுவர் தீர்ப்பு வழங்குவார். பொங்கல் செய்முறையை ஒரு அட்டையில் எழுதி பொங்கல் அருகில் வைக்கவும்.
  6. ஆர்வமுள்ள அனைத்து பெண்கள், ஆண்கள் பங்கேற்கலாம். போட்டி படிவத்தில் பூர்த்திசெய்து சமர்பித்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

 

  1. Pongal needs to be cooked and brought in for just 2 persons.
  2. Be creative in presenting, rice or multigrain can be used
  3. Judges decision is final.
  4. Pongal is to be cooked at home and brought in.
  5. Ranking will be based on taste, creativity and ingredients used. Pongal is to be cooked at home and brought in. Place the Recipe card next to the pongal dispay.
  6. Women and men are welcome to take part. Only registered participants are allowed to take part on the day of the event.
Shopping Cart
Scroll to Top