Join our Mailing List
2021 Deepavali Celebration Event Details
back to events
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித் திருவிழா வரும் அக்டோபர் 17ம் நாள்
Valley Road Picnic Area, Lambertville NJ திறந்தவெளிப் பூங்காவில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் நேரடியாகத் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
To RSVP : https://tinyurl.com/w7zuv23u
To Buy Ticket and Food- Click Here
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக, VGP உலக தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் திருமிகு V.G.P. சந்தோசம் அவர்களும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (FETNA) ஒருங்கிணைந்து நம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்திற்கு அளித்த அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. மேலும் முதல் முறையாக வல்லினச் சிறகுகள் அமைப்புடன் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது.
ஆடல், பாடலுடன் கலை நிகழ்ச்சிகள், தமிழரின் பாரம்பரியப் பறை இசையுடன் கூடிய அதிரவைக்கும் ஆட்டம், இளையோர், பெரியோரைக் கவரும் மேஜிக் நிகழ்ச்சி, பார்வையாளர்கள் பங்குபெறும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி, ஆடை அணிகலன்கள் கடைகள், சுவையான உணவுக் கடைகள், வண்ணப் புகைப்படச் சாவடி என்று பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைவரும் இணைந்து தீபாவளித் திருவிழாவைக் கொண்டாட வாருங்கள்! மேலும் விவரங்கள் விரைவில்!!
முகக்கவசம் அவசியம்.