நியூஜெர்சி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா 2014 நினைவாக தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலத்தில் பயிலும் பெண்களுக்கான விடுதி கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. அவ்விடுதிக் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு ஜூலை 4ம் தேதி நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிறுவனர் மருத்துவர் பழனிசாமி சுந்தரம் அவர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்தில் இந்த அமைப்பு நீண்டகாலம் அக்கறையுடன் பணியாற்றிவருகிறது. நியூஜெர்சி தமிழர்களின் 25 வருட தொடர்ந்த ஆதரவில் இந்த நிதி சேமிக்கப்பட்டு 2014ம் ஆண்டு நிதியுதவி செய்யப்பட்டது.
நியூஜெர்சி தமிழர்கள் அனைவரையும் நினைவுகொள்ளும் வகையில் நம் தமிழ்ச்சங்கப் பெயரில் நினைவுக்கல்வெட்டு அவ்விடுதிக் கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.