
$35.00
$35.00
நறுமண பூக்களை தலையிலேந்தி வசந்தப்பூங்காற்றை இருகையால் அரவணைத்து பச்சைப்புல்வெளியில் ஒயில்நடை பயில வரும் சித்திரைத் திருமகளை நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, “கதைசொல்லி” திரு. பவா செல்லதுரை அவர்கள் தலைமையில் தாய்த்தமிழ் விருதுகள், காலஞ்சென்ற “பாரத ரத்னா” M.S. சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளு பெயர்த்திகள் ஐஸ்வர்யா – சௌந்தர்யா சகோதரிகளின் தமிழிசை, திரு. “T V” வரதராஜன் குழுவினரின் சிறப்பு நகைச்சுவை நாடகம் என முத்தமிழ் கமழ வரவேற்க வாருங்கள். வசந்தம் வருடும் வேளையிலே, திருமண பருவத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு இணைப் பொருத்தம் காணும் நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.