நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் தன் சீரிய பணியில் 30 வருடங்களாகத் தொடர்கிறது. தமிழ்மொழிக் கல்விப்பணியை செய்துவரும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி வருகிறது. திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளிக்கு கணிணி வகுப்பு அறை கட்ட உதவி, பொள்ளாச்சி தாய்த்தமிழ்ப்பள்ளிக்கு குழந்தைகளின் போக்குவரத்துக்கு மூடுந்து, புதுக்கோட்டை தாய்த்தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவியதைத் தொடர்ந்து சென்றவருடம் கஜா புயலால் இடிந்த வடகாடு கூரைவேய்ந்த தாய்த்தமிழ்ப்பள்ளி மீண்டும் உறுதியான கட்டிடமாய் உயிர்த்தெழ உதவியிருக்கிறது.
தமிழ்ச்சங்கங்கள் தங்கள் பகுதியில் இருக்கும் தமிழர்களை இணைக்கும் பாலமாக செயல்பட்டு நம் ஒருங்கிணைப்பின் பயனை நற்காரியங்களுக்கு செல்லும் வகைசெய்யவேண்டும் என்னும் நோக்கத்தில் வழுவாது 30 வருடங்களாக செயல்படுகிறது.